×

ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி: மாணவர்கள் படைப்பாற்றல் அறிவுத்திறன் மேம்படும்

கரூர், ஏப்.28: தமிழகத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை தொடக்கக்கல்வி சார்பாக நகர்மன்ற கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இன்று உலகம் முழுதும் தகவல், வலைதள பயன்பாடு ஆய்வற்றில் உலக அளவில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அதிகம் படித்தவர்கள் மட்டுமே கம்ப்யூட்டர் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை பல்வேறு தொழில்நுட்ப மாற்றத்தால் மாறி உள்ளது. குறிப்பாக பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புத்தாக்க பயிற்சி மற்றும் தங்கள் தங்களின் செயல் திறனை அதிகப்படுத்துவதற்கு வழிமுறைகள் வலைத்தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மாணவர்கள் கல்வியில் உலக அளவில் புகழ்பெற்று திகழ வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி நடுநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்விகளுக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கி மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பல்வேறு சீரமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக கரூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலே முதல் முறையாக மாணவ, மாணவியருக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு) பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் வாயிலாக குறிப்பிட்ட ஒரு ஆப் ( பதிவிறக்கம்) நம் கம்ப்யூட்டரில் அல்லது செல்போனையோ மானிட்டர் செய்து கொண்டு பள்ளிப்படிப்போடு மட்டுமல்லாமல் புதிதாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவையான அந்த ஆப் மூலம் எளிதில் பெற முடியும்.

இப்படி பெறக்கூடிய வசதிகளை கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரிய ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக 27 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளை கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு வசதி மூலம் மாணவர்கள் பெறக்கூடிய வசதி குறித்து அவர் தெரிவித்ததாவது: செயற்கை நுண்ணறிவு வாயிலாக கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆசிரியர்கள் அனைவரும் பெறும் பயிற்சியானது மாணவரின் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் என்பதால் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்து ஓய்வு ஆசிரியர் பயிற்சி முதல்வர் சிவகுமார்,
கைபேசி மற்றும் கணிப்பொறி உதவி கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்றல் கற்பித்தல் உத்திகளை வடிவமைப்பது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கி கூறினார்.

செயற்கை நுண்ணறிவு பயிற்சியின் முக்கிய அம்சங்கள்: பாடத்திட்டம் தயாரித்தல், கதைகளை உருவாக்குதல், நாடகங்களை உருவாக்குதல்,விடுகதை மற்றும் பாடல்களை உருவாக்குதல், பல வகையான வினா விடைகளை உருவாக்குதல், உயர்தர சிந்தனை வினா விடைகளை உருவாக்குதல், மாணவர்களே வினா தாள் வடிவமைப்பது, வாக்கியங்களை உருவாக்கி ஒலி பதிவு செய்வது,வாக்கியங்களை உருவாக்கி படங்களை உருவாக்குவது,படங்களை பேச வைப்பது, வகுப்பறை பாட புத்தகத்தில் உள்ள பாடங்களை கலந்துரையாடலாக மாற்றுவது, நாடகமாக மாற்றுவது பலதரப்பட்ட வினா விடைகளாக மாற்றுவது, எளிதாக மொழிமாற்றம் செய்து செயற்கை நுண்ணறிவு வலைதளம் மற்றும் செயலி கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு பயன்கள்: கிராமப்புறங்களில் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் இருந்த சிக்கலை நீக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு செயலி பயன்படுத்தி மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாட முடியும். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி செயல்பாடுகளுக்கு கைபேசி முக்கிய பங்கு வகிக்கிறது. கைபேசியை எவ்வாறு கையாள வேண்டும் எவ்வளவு நேரம் கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே முதல்முறையாக ஆசிரியர்களுக்கு இவ்வாறு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது ஒரு பாராட்டப்பட வேண்டிய செயலாகும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிலும் பிற ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சியை வழங்கி அதன்பின் கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் இந்த வசதியை நேரடியாக கற்பிக்கப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கூட செயற்கை நுண்ணறிவு பயிற்சி இன்னும் செயல்படுத்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். மேலும் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வித செலவு இல்லாமல் தாங்களாகவே பயிற்சி எடுத்து எடுத்துக் கொள்ள முடியும் இப்பயிற்சி மாவட்ட திட்ட மேலாண்மை குழு மேற்பார்வையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி தலைமையில் நடைபெற்றது.

The post ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி: மாணவர்கள் படைப்பாற்றல் அறிவுத்திறன் மேம்படும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Nagarmanda Kotdamedu High School ,School Education Department ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...